ரயில் பயணிகளுக்கு கேஷ்பேக் - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு
ரயில் பயணிகளுக்கு 3% கேஷ்பேக் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
UTS மொபைல் ஆப்
தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை மின்சார ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இது போன்ற முன்பதிவில்லாத ரயில்களின் டிக்கெட்களை, வரிசையில் நிற்காமல் UTS மொபைல் ஆப் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த UTS ஆப் அல்லது ATVM (Automatic Ticket Vending Machine) மூலம் அனைத்து வகையான முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள், பிளாட்ஃபார்ம் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட்டுகளை பெற முடியும்.
3% கேஷ்பேக்
இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், இதில் உள்ள R-Wallet பயன்படுத்தி UTS மொபைல் ஆப் அல்லது ATVM மூலம் டிக்கெட் எடுத்தால் 3% கேஷ்பேக் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறையானது டிசம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்னதாக R-Wallet இல் ரீசார்ஜ் செய்யும் போது 3% கேஷ்பேக் வழங்கப்பட்டு வந்தது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil