இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தும் சூப்பர் செயலி - இனி அனைத்தும் ஒரே இடத்தில்
இந்திய ரயில்வே அனைத்து சேவைகளையும் ஒரே செயலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வே
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில் மூலம் பயணம் செய்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் டிக்கெட் கவுண்டருக்கு செல்வதை விட இணையம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யவே விரும்புகிறார்கள்.
இதில் டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTC செயலி, முன்பதிவு இல்லாத ரயில்களில் டிக்கெட் பெற யுடிஎஸ் செயலி, PNR ஸ்டேட்டஸ் செக் செய்ய தனியாக ஒரு செயலி என ரயில்வேயின் சேவைகள் அனைத்திற்கும் தனி தனி செயலிகள் உள்ளதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
சூப்பர் ஆப்
இவை அனைத்தும் ஒரே செயலியில் பெற சூப்பர் ஆப் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ரயில்வே ஈடுபட்டுள்ளது. ரயில்வேக்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்யும் அமைப்பான CRIS இந்த செயலியை தயாரித்து வருகிறது.
IRCTC டிக்கெட் புக்கிங், முன்பதிவு இல்லாத ரயில்களுக்கான புக்கிங், இருக்கையில் உணவு ஆர்டர் செய்வது, புகார் மற்றும் பரிந்துரை அளிப்பதற்கு என அனைத்து சேவைகளையும் இந்த ஒரே செயலியில் பெற முடியும்.
இந்த சூப்பர் ஆப் செயலி இந்த ஆண்டு இறுதியில் பயன்பாடுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IRCTCயின் சேவைகளை மேம்படுத்துவதற்கும் வருவாயை அதிகரிப்பதற்குமான உத்தியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.