ரயில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே நிர்வாகம்
ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை குறைத்துள்ளது ரயில்வே நிர்வாகம்.
ரயில் போக்குவரத்து
இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பொதுப்போக்குவரத்திற்காக ரயில்களை பயன்படுத்துகின்றனர். பயணிகளை கவரும் வகையில் ரயில்வே துறையும் பல்வேறு வசதிகளை செய்கிறது.
பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக பயணிகள் பயணித்து வருகின்றனர். இதனால், பொதுமக்களின் வசதிக்காக, 2015 ஆம் ஆண்டு முதல் 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
முன்பதிவு காலம்
தற்போது இந்த முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதேபோல பகல் நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களான தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[26IOVTE
மேலும், வெளிநாட்டு பயணிகளுக்கான 365 நாட்கள் முன்பதிவு கால அவகாசத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டிக்கெட் முன்பதிவு செய்ததில் எந்த மாற்றமுமில்லை. இந்த நடைமுறை நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது.