அணையப்போகும் விளக்கல்ல - கலங்கரை விளக்கு!! அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் பதிலடி
அதிமுக அணையப்போகிற விளக்கு என்பதால் தான் பிரகாசமாக எரிகிறது என அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
அண்ணாமலை விமர்சனம்
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு இந்துத்துவவாதி என பேசியதில் இருந்து பாஜக - அதிமுக இருகட்சிகளுக்கு இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக அண்ணாமலைக்கு அதிமுகவினர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், சசிகலாவும் தனது தரப்பு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இது தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது, அதிமுக அணையப்போகிற விளக்கு என்றும் அதனால் தான் பிரகாசமாக எரிகிறது என்றும் அண்ணாமலை விமர்சித்திருந்தார்.
அணையப்போகும் விளக்கல்ல...
இதற்கு அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது குறித்து கேட்ட போது, அதிமுக அணையப்போகும் விளக்கல்ல, நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம் என்றார்.
அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை என்றும் கூறி, விளம்பர வெளிசத்தில் அவர் அரசியல் செய்கிறார் என சாடி, தமிழகத்திற்காக அண்ணாமலை என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா என வினவினார்.
மேலும், அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனார்கள் என்பதை நினைவூட்டுகிறோம் என தெரிவித்து சென்றார்.