அதிமுக அணையப் போகிற விளக்கு..அதான் பிரகாசமாக எரியுது - அண்ணாமலை விமர்சனம்
அண்ணாமலை பேட்டி
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்து சாமி தரிசனம் செய்த நிலையில், அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேரில் சந்தித்து பேசினார். அமித் ஷாவை சந்திக்க காரைக்குடி வந்திருந்தவர், அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தின்போது திருமயம் கோயிலுக்கு வருவதாக இருந்தது.
வானிலை காரணமாக வர முடியாமல் போனது. ஆனால், தேர்தல் முடிவதற்குள் அக்கோயிலுக்கு வருவதாக உத்தரவாதம் கொடுத்திருந்த அவர், தேர்தல் பிரச்சாரம் முடியும் கடைசி நாளான இன்று இக்கோயிலுக்கு வந்துள்ளார்.
அணையும் விளக்கு
தனியார் அமைப்பு அழைப்பாலேயே பிரதமர் விவேகானந்தர் மண்டபம் வந்துள்ளார் என்று குறிப்பிட்ட அண்ணாமலை, அதனால் கட்சியினர் யாரும் அங்கு செல்லவில்லை என விளக்கமளித்தார்.
ஜூன் 4-ஆம் தேதிக்கு பின்னர் அதிமுக எங்கே இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம் என சவால் விடுத்த அவர், பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்ப்போம் என்றார்.
எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்பதையும் அன்று பார்ப்போம் என்ற அண்ணாமலை, அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பர் என கூறி அதனால் தான் அதிமுகவினர் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர் என்று கூறினார்.