அண்ணாமலை ஒரு அரசியல் வியாதி - அவரோடு விவாதிக்க முடியாது - ஜெயக்குமார்!!

Tamil nadu ADMK BJP K. Annamalai D. Jayakumar
By Karthick May 29, 2024 04:40 AM GMT
Report

ஒரு அரசியல்வாதியோடு விவாதிக்கலாம், அரசியல் வியாபாரியோடு விவாதிக்க முடியாது என அண்ணாமலையை ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார் .

அண்ணாமலை விவகாரம்  

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி ஒன்றில், “ஜெயலலிதா இந்துத்துவ தலைவர், ராமர் கோவில் கட்ட வேண்டுமென ஜெயலலிதா கையெழுத்து இயக்கம் நடத்தினார், கரசேவையை ஆதரித்தார் என்னும் கருத்துகளை முன்வைத்துள்ளார்.

இது பெரும் சர்ச்சையானது. இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது,

admk jayakumar calls annamalai a disease

எங்களுடைய கட்சித் தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் ஏழை எளிய மக்களுக்காகவே தங்களின் வாழ்வை அர்ப்பணித்தவர்கள்.ஏழை எளிய மக்களின் சமூக, கல்வி, பொருளாதார ஏற்றத்திற்காக ஜாதி, மத, இன, மொழி அனைத்தையும் தாண்டி பல திட்டங்களை தீட்டியவர்கள்.

ஜெயலலிதா ஒரு இந்துத்துவ தலைவர் என்று அண்ணாமலை பேசிய கருத்தை தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் எந்த தமிழர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தனது ஆட்சிக் காலத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என அனைத்து சமுதாய மக்களும் இணக்கத்துடன் வாழும் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள இப்படி செய்கிறார் - அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்!

தன்னை அடையாளப்படுத்தி கொள்ள இப்படி செய்கிறார் - அண்ணாமலைக்கு அதிமுக கண்டனம்!

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு எங்கள் கட்சியை பார்த்து தான் திமுக ஆரம்பித்தது. மத நல்லிணக்கத்திற்க்காக இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அண்ணாமலையின் கட்சியில் தலைவர்களே இல்லையா? அத்வானி குறித்தோ, வாஜ்பாய் குறித்தோ ஏன் அவர் பேசுவதில்லை? அண்ணாமலை திமுகவின் ‘பி’ டீம்.

திராணி இல்லை

தமிழ்நாட்டில் இருக்கும் மின்வெட்டு பிரச்சினை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, போதை வஸ்துகள் நடமாட்டம் ஆகியவை பற்றி அவர் வாய் திறப்பதில்லை. திமுக அரசை கண்டிக்க அவருக்கு திராணி இல்லை. அவருடைய ஒரே நோக்கம் ஜெயலலிதா குறித்து பேசுவதுதான். ஜெயலலிதாவை பொறுத்தவரை தெய்வபக்தி கொண்டவர்தான். மதவெறி பிடித்தவர் அல்ல.

admk jayakumar calls annamalai a disease

திமுக அரசின் அடாவடித்தனங்கள் மக்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காக ஸ்டாலினும் அண்ணாமலையும் சேர்ந்து செய்கின்ற கூட்டுச்சதி இது. அண்ணாமலையை பக்குவமில்லாத அரசியல் தலைவர் என்று கூட சொல்லமுடியாது. அவர் ஒரு அரசியல் வியாபாரி. அரசியல் வியாதி. ஒரு அரசியல்வாதியோடு விவாதிக்கலாம், அரசியல் வியாபாரியோடு விவாதிக்க முடியாது. இத்தோடு அவர் தன்னுடைய கருத்துகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்று தமிழ்நாடு 69% இடஒதுக்கீடு அனுபவிப்பதற்கு நன்றி சொல்ல வேண்டுமென்றால் அதற்கு தகுதியானவர் ஜெயலலிதா தான். அத்தகைய சமூகநீதி காத்த வீராங்கனையை மதவெறி பிடித்தவர் போல சித்தரிக்க முயல்வது திமுக - பாஜகவின் கூட்டுச்சதி. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.