அரசியலில் ஒருபக்கம் மனைவி..மறுப்பக்கம் தங்கை - திணறும் ஜடேஜா!
ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் தேர்தல்
குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன் அடிப்படையில், பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்,
வடக்கு ஜாம்நகர் தொகுதியின் பாஜக வேட்பாளராக பிரபல கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபாவை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் ரவீந்திர ஜடேஜாவும் அவரது மனைவியும் இணைந்தனர்.
ஜடேஜா மனைவி?
இந்நிலையில், ஜடேஜாவின் மனைவி போட்டியிடும் அதே தொகுதியில் அவரது சகோதரி நைனா ஜடேஜா காங்கிரஸ் சார்பில் போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜா பாஜகவில் இணைந்த பிறகு தான் அவரது சகோதரி நைனா ஜடேஜா காங்கிரஸில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சிட்டிங் எம்எல்ஏக்கள் நிறைய பேருக்கு வாய்ப்பு வழங்கப்படாது எனவும், புதுமுகங்களை களமிறக்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.