கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி

Ravindra Jadeja Chennai Super Kings
By Irumporai 3 மாதங்கள் முன்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி பிந்தங்கியதை தொடர்ந்து அ அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.அப்போதிலிருந்தே  ஜடேஜாவுக்கும் – சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது.  

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி | Why Jadeja Quit Captaincy From Csk

2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த ஐபிஎல் தொடரில் 16 கோடியில் தக்க வைக்கப்பட்டார்.சமீபகாலமாக சிஎஸ்கே அணிக்காக போட்ட சமூக வலைதள பதிவுகளை ஜடேஜா நீக்கியதால் அவருக்கும் பணி நிர்வாகம் மற்றும் தோணியுடன் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சிஎஸ்கே உறவில் மன கசப்பு

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாட மாட்டார் என கூறப்பட்ட நிலையில் சி.எஸ்.கே.வுடன் தொடர்பை ஜடேஜா முறித்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆகவே இனி வரும் சீசன்களில் சிஎஸ்கே அணியிக் ஜடேஜா இடம்பெறமாட்டார் என கூறப்படுகிறது.

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்?  ரசிகர்கள் அதிர்ச்சி | Why Jadeja Quit Captaincy From Csk

கடந்த சீசனில் ஜடேஜாகேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் ஜடேஜா தொடர்ந்து சொதப்பியதால் அவருக்கு இந்திய அணியிலும் பிரச்சனை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால்தான் தோனியும், அணி நிர்வாகமும் இணைந்து இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.  

இந்த நிலையில் அடுத்த  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவீந்திர ஜடேஜா விளையாட மாட்டார் என கூறப்படும் தகவல் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.