தோனிக்காக என்னை அவுட் ஆக சொல்றாங்க - ஜடேஜா தகவல்

MS Dhoni Ravindra Jadeja Chennai Super Kings IPL 2023
By Sumathi May 11, 2023 11:03 AM GMT
Report

தோனி ரசிகர்கள் குறித்து ஜடேஜா ஜாலியாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஜடேஜா

சென்னை டெல்லி இடையேயான போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்தப் போட்டியில், பந்துவீச்சில் நான்கு ஓவர்கள் பந்துவீசி 19 ரன்கள் தந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை ரவீந்திர ஜடேஜா வென்றார்.

தோனிக்காக என்னை அவுட் ஆக சொல்றாங்க - ஜடேஜா தகவல் | Ravindra Jadejas Fun Speech About Dhoni Fans

அதன்பின் பேசிய அவர், “ ஒரு ஸ்பின்னராக பந்து நன்றாக ஸ்பின் ஆவதும் ஹோல்ட் ஆவதும் நன்றாக உணர்கிறேன். நாங்கள் இங்கேயே பயிற்சி செய்கிறோம். எனவே எங்களுக்கு இங்கு எது சரியான லைன் லென்த் என்று தெரியும்.

அது போதும்

அதுதான் எங்களுடைய ஹோம் கிரவுண்டில் விளையாடுவதிலுள்ள நன்மை. நான் 7 வது பேட்ஸ்மேனாக களமிறக்கும்போது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து, `தோனி, தோனி!' என கத்தி ஆராவாரம் செய்கிறார்கள். நான் ஆட்டமிழந்து போகும்போது தோனி வருகிறார் என்பதற்காக மகிழ்ச்சியாக வரவேற்கிறார்கள்.

தோனிக்காக என்னை அவுட் ஆக சொல்றாங்க - ஜடேஜா தகவல் | Ravindra Jadejas Fun Speech About Dhoni Fans

ஆர்டரை மாற்றி மேலே இறங்கினால் நான் எப்போது அவுட் ஆவேன் என ரசிகர்கள் காத்திருக்கக்கூடும் எனக் கூறியவர், சிரித்துக்கொண்டே `அணி வெற்றி பெற்றால் போதும் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.