உனக்கு அவ்ளோதான் லிமிட்.. சீறிய ஜடேஜா : கூல் செய்த தோனி
நேற்று ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதிக் கொண்ட நிலையில் ஜடேஜா – க்ளாசன் இடையேயான மோதல் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஐபிஎல்
நேற்று ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே – சன்ரைஸர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிக் கொண்டன. டாஸ் வென்று பவுலிங் தேர்ந்தெடுத்த சிஎஸ்கே அணி சன்ரைஸர்ஸை பந்தாடியது.
வென்ற சிஎஸ்கே
சன்ரைஸர்ஸ் வீரர்கள் எல்லாம் சொற்ப ரன்களிலேயே அவுட்டாக 135 என்ற குறைந்த டார்கெட்டையே வைக்க முடிந்தது. சிஎஸ்கேவின் நட்சத்திர வீரர் டேவன் கான்வே 57 பந்துகளில் 12 பவுண்டரிகள் 1 சிக்ஸர் என 77 ரன்களை குவித்து அவுட் ஆகாமல் நின்றார். இதனால் சிஎஸ்கே 138 ரன்களை எளிதாக சேஸ் செய்து வென்றது.
தவறி விழுந்த ஜடேஜா
இந்த போட்டியில் 13வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்து மயங்க் அகர்வால் அடித்து ஜடேஜாவுக்கு கேட்ச்சாக வந்தது. அதை ஜடேஜா பிடிக்க முயன்றபோது பவுலிங் ரீச்சில இருந்த கிளாசன் பந்து படாமல் நகர்வது போல் ஜடேஜா மேல் மோதினார். இதில் ஜடேஜா கேட்ச்சை மிஸ் செய்து தவறி விழுந்தார்.
இதனால் கோபமான ஜடேஜா கிளாசனிடம் வாக்கு வாதம் செய்தார். பின்னர் சமாதானமடைந்து பந்து வீச தொடங்கிய ஜடேஜா, ஒரு பந்து வீசிய பிறகு மீண்டும் கிளாஸனிடம் வாக்கு வாதம் செய்தார். பிறகு தோனி ’வாக்கு வாதம் வேண்டாம்’என்பதுபோல சைகை காட்டினார்.