ஆங்கிலத்தில் பேச மறுத்த ஜடேஜா.. ரத்தான போட்டி - ஆஸிக்கு எதிராக கிளம்பிய இந்திய ஊடகம்!

Ravindra Jadeja Indian Cricket Team Australia Cricket Team
By Swetha Dec 23, 2024 05:30 PM GMT
Report

ஆங்கிலத்தில் பதிலளிக்க ஜடேஜா மறுக்கிறார் என ஆஸி ஊடகத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

ஜடேஜா.. 

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ' பார்டர் - கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் மூன்று போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.

ஆங்கிலத்தில் பேச மறுத்த ஜடேஜா.. ரத்தான போட்டி - ஆஸிக்கு எதிராக கிளம்பிய இந்திய ஊடகம்! | Ravindra Jadeja Over Ind Vs Aus Media Issue

இரு அணிகள் மோதும், நான்காவது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக துவங்குகிறது. இதற்காக இந்திய அணி மெல்போர்னில் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். அதற்கு முன்னர், இரு நாட்டு ஊடகத்தினர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸி கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது.

அன்புள்ள கோலிக்கு.. கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெருங்கள் ப்ளீஸ் - ரசிகர் கண்ணீர் மல்க கடிதம்!

அன்புள்ள கோலிக்கு.. கிரிகெட்டில் இருந்து ஓய்வு பெருங்கள் ப்ளீஸ் - ரசிகர் கண்ணீர் மல்க கடிதம்!

இந்திய ஊடகம்

அப்போது ரவிந்திர ஜடேஜா ஊடகத்தினரை சந்தித்து பேசினார். அவரிடம் ஆஸ்திரேலிய ஊடகத்தினர் கேள்வி கேட்டனர். அதற்கு ஜடேஜா ஹிந்தியில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்கிலத்தில் பதிலளிக்கும்படி ஆஸி ஊடகத்தினர் கூறியும்,

ஆங்கிலத்தில் பேச மறுத்த ஜடேஜா.. ரத்தான போட்டி - ஆஸிக்கு எதிராக கிளம்பிய இந்திய ஊடகம்! | Ravindra Jadeja Over Ind Vs Aus Media Issue

அதனை ஜடேஜா ஏற்கவில்லை. தொடர்ந்து ஹிந்தியிலேயே பதிலளித்ததாக தெரிகிறது. ஆனால் அதை மறுத்த இந்திய ஊடகத்தின் ஒரு பிரிவினர் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இந்திய அணியுடன் சென்றவர்கள் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆங்கிலத்தில் பதில் அளிக்க மறுக்கவில்லை என தெரிவித்தனர். இது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்திய ஊடகப்பிரிவினர், ஒருவர் பின் ஒருவராக போட்டியில் இருந்து விலகினர். இதையடுத்து, ஊடகம் இடையே போட்டி கைவிடப்போவதாக அறிவிக்கப்பட்டது.