மாமியார் கொடுமையில் மகாலெட்சுமி - உண்மை உடைத்த ரவீந்தர்!
ரவீந்தர் சமீபத்தில் பகிர்ந்த சோக பதிவொன்று வைரலாகி பேசு பொருளாகியது.
விவாகரத்து வதந்தி
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
அவ்வப்போது முன்னணி யூடியூப் ஊடகங்களிலும் பேட்டி அளித்து வருகின்றனர். அது குறித்த புகைப்படங்களை அவ்வப்போது பகிர்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன் வரிசையில், வாழ்வதற்கான காரணம் கடினமான நேரங்களில் புன்னகையை நேசிப்பதே,
சோக பதிவு
ஏனெனில் அவர்கள் உங்களின் வருத்தத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சோக பதிவொன்றை ரவீந்தர் அண்மையில் பகிர்ந்திருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் பிரச்சனையா? பிரிந்து விட்டார்களா? என கேள்விகளை எழுப்பி வந்தனர்.
அதற்கு விளக்க தரும் விதமாக அவர், நான் நேரம் போகிறதுக்காக சும்மா போட்டேன். அதுவும் நான் ஒல்லியா இருக்கும்போது எடுத்த போட்டோவை தான் தேடி பிடித்து என் காலத்துல ட்ரெண்டிங்கில் இருந்த ஒரு பாட்டை வைத்து எடிட் செய்து போட்டேன்.
ரவீந்தர் விளக்கம்
பொதுவா ஒரு அம்மா என்ன நினைப்பாங்க? கல்யாணத்துக்கு முன்னாடி தான் நம்ம பையன் கடையில் சாப்பிட்டு கஷ்டப்பட்டுட்டு இருக்கான். இனி ஒரு மனைவி வந்தா வீட்டில சமையல் செஞ்சு சாப்பிட்டு நல்லா இருப்பானு நினைப்பாங்க. ஆனா என் பொண்டாட்டியும் சூட்டிங்கில் பிஸியா வேலை செஞ்சுட்டு வீட்டில் வந்து எதுவும் செய்ய முடியாது.
ஆனாலும் எனக்காக செய்ய ட்ரை பண்ணுவா. அப்போ நம்ம குடும்பத்தை பார்க்கவா இல்ல நம்ம ப்ரொபஷனல பார்க்கவா என்று ஒரு சிந்தனை வரும்போது பல நேரங்களில் நான் இனி நடிப்பை விட்டு விடுவேன் என்று என் பொண்டாட்டி சொல்லி இருக்காங்க. அது நடக்கிற காரியம் கிடையாது.
அவங்க எவ்வளவு இந்த வேலையை நேசிக்கிறாங்கனு எனக்குத்தான் தெரியும்.
பெரிய அளவில் எங்களுக்குள்ள சண்டை எல்லாம் எதுவும் கிடையாது. இதை தெரியாம தான் பலரும் அப்படி இப்படி என்று கிளப்பி விடுறாங்க எனத் தெரிவித்துள்ளார்.