இரண்டே வருடம் தான்...அதுக்குள்ள விவகாரத்தா..? இணையத்தில் போட்டுடைத்த ரவீந்தர்
சின்னத்திரையில் பிரபலமான ஜோடியாக வளம் வருகிறார்கள்
ரவீந்தர் - மஹாலக்ஷ்மி
ரவீந்தர் - மஹாலஷ்மி சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததன் மூலம் பிரபலமானவர் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.லிப்ரா புரோடக்சன்ஸ்பெயரில் தயாரிப்பு நிறுவனம் இவருக்கு சொந்தமாக உள்ளது.
நடிகை, தொகுப்பாளினி என வலம் வரும் மகாலட்சுமி, திருமணத்திற்கு பிறகும் நடிப்பு சமூகவலைத்தளம் போன்றவற்றில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். இந்த ஜோடி விரைவில் பிரிந்து விடும், மகாலெட்சுமி பணத்திற்காக திருமணம் செய்துள்ளார் என பலரும் விமர்சித்து வந்தனர்.
ஆனால், 2 வருடங்களாக இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தான் தன்னுடைய பழைய புகைப்படத்தை ஒன்றை பகிர்ந்து, எனக்குள் என்னையே மிஸ் செய்வது போல் மோசமாக உணர்கிறேன் என பதிவிட்டிருந்தார்.
விவகாரத்தா..?
உடனே மீண்டும் விவாகரத்து தகவல் காட்டுத்தீ போல பரவியது. அதற்கு ரவீந்தர் விளக்கமும் அளித்துள்ளார். ரவீந்தரின் பதவில் நெட்டிசன் ஒருவர், உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என கேட்டார்.
அதற்கு ரவீந்தர், எனக்கு எஞ்சி இருக்கும் ஒரே உலகம் மகாலட்சுமி தான், அதனால் நீங்கள் கடினமாக பிரார்த்தனை செய்து கொண்டே இருங்கள், ஆனால் நீங்கள் நினைப்பது மட்டும் நடக்காது, அது சாத்தியமற்றது என திருப்பி பதிலடி கொடுத்துள்ளார்.