ஏன் இப்பவே அதப்பத்தியெலாம் கேக்குறீங்க...எனக்கு 17 வயசு தான் ஆகுது - கடுப்பான அனிகா
நடிகை அனிகா சுரேந்திரன், தென்னிந்திய சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் பெற்று வருகின்றார்.
அனிகா சுரேந்திரன்
மலையாள சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன்(18). தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து, அண்மையில் அனிகா முதன்முதலாக ஹீரோயினாக நடித்த 'ஓ மை டார்லிங்', புட்ட பொம்மா திரைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தற்போது மலையாளத்தில் மாலு என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், தமிழில் தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
முன்னதாக வெளியான "ஓ மை டார்லிங்" முத்தக்காட்சிகளிலும் நடித்து பெரும் அதிர்ச்சியை ரசிகர்களுக்கு கொடுத்தார் அனிகா. அவரை குறித்து நெகட்டிவ் கருத்துக்களே பெரும்பாலும் சமூகவலைத்தளத்தில் வெளிப்பட்டது.
இப்படியெல்லாம் கேக்குறீங்க...
முன்னணி நடிகையாகவேண்டும் என்ற ஆசை கொண்டுள்ள அனிகா அடிக்கடி சமூகவலைத்தளங்களில் அடுத்தடுத்த கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றார். இதற்கிடையில் தான், இவரின் பழைய பேட்டி ஒன்று சமூகவலைத்தளத்தில் தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
அப்பேட்டியில்,பீர் அருந்துவீர்களா இல்லை ஒயின் அருந்துவீர்களா என்று கேள்விக்கு பதிலளித்த அனிகா, எனக்கு இப்போது 17 வயதுதான் ஆகிறது. அதற்கு இந்த மாதிரி கேள்வி கேட்குறீங்க. இப்படியெல்லாம் கேள்வி கேட்காதீங்க என்று சற்று கோபமாகவே பதிலளித்திருந்தார்.