பாலு மகேந்திராவிடம் இந்த வயசுல பொண்ணு உனக்கு வேணுமா'னு கேட்டாங்க...வளர்ப்பு மகள் வேதனை
பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் தாக்கம் இன்னும் தமிழ் சினிமாவில் அழுத்தமாகவே இருக்கின்றது.
பாலு மகேந்திரா
தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் பாலு மகேந்திரா. ஒளிப்பதிவாளர், இயக்குனர் எடிட்டர் என பன்முகதன்மை கொண்ட பாலு மகேந்திரா 6 தேசிய விருதுகள், 5 ஃபிலிம் பேர் விருதையும் வென்றுள்ளார்.
தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், பாலா போன்றோர் அவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்களே. தமிழ் சினிமா இன்றி இந்திய சினிமாவிலேயே தனக்கென தனி அடையாளத்தை விட்டு சென்றுள்ளார் பாலு மகேந்திரா. இவர் சக்தி என்பவரை தத்து எடுத்து வளர்ப்பு மகளாக வளர்த்தார்.
இந்த வயதில்
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலு மகேந்திரா குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அப்பேட்டியில் அவர் பேசியது வருமாறு,
சினிமா ஆர்வம் இருந்ததால் உறவினர் பாலு மகேந்திராவிடம் அறிமுகம் செய்ய பாலு மகேந்திராவை பார்க்க சென்ற போது, அவர் என்னை "மகளே உள்ளே வா" என்று அழைத்தார்.
2 மாதம் கூட நீடிக்காத முதல் திருமணம் - பிரிய இப்படி ஒரு காரணமா..? 51 வயதில் டாப் ஸ்டாருக்கு 2-வது திருமணம்..!
அதன் பிறகு சில நாட்கள் கழித்து எங்களை திருப்பி அழைத்த போது, தனக்கு பெண் குழந்தை இல்லை, பொண்ணு வளர்க்கணும் என்று ஆசை, இவங்கள பொண்ணாக பார்த்துக் கொள்ளட்டுமா என்று அம்மாவிடம் கேட்டார். அதனை தொடர்ந்தே 2010 ஆண்டில் இருந்து இறக்கும் வரை அவருடனே இருந்தேன்.
அப்போது எனக்கு வயது 11 இருக்கும். அப்பா இறந்த சில மாதத்தில் பாலு மகேந்திரா என் மீது பாசமாக இருந்தது மிகவும் எமோஷ்னலாக இருந்தது.
என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். பாலு மகேந்திராவிடம் இந்த வயதில் உனக்கு பொண்ணு கேட்குதான்னு என்றெல்லாம் தப்பா பேசினார்கள். அது எங்க இருவருக்குமே தெரியும். எங்கள் உறவை யாருக்கும் புரிய வைக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.