மகா கேட்ட அந்த கேள்வி; நொறுங்கிப் போயிட்டேன் - கண்ணீர் விட்ட ரவீந்தர்!
ரவீந்தர் சந்திரசேகரன் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
மோசடி வழக்கு
சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.இவர்களின் திருமணம் திருப்பதியில் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.
இந்நிலையில், 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ரவீந்தர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பிணைத் தொகை கொடுத்து தற்போது ஜாமினில் விடுதலை ஆகி உள்ளார்.
ரவீந்தர் பேட்டி
தொடர்ந்து, அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ன் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம், எங்கிட்ட இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லும் போது, எப்படி உட்காருவ, எப்படி எந்திருப்ப என மகா கேட்கும் போது நொறுங்கிப் போயிட்டேன்.
என் உடல் மற்றவர்கள் உடல் போல அப்படியெல்லாம் ஈடு கொடுக்காது. எவ்ளோ எடுத்து சொல்லியும் கைது செய்து கொண்டு சென்று விட்டனர் நான் எந்த மோசடியும் செய்யவில்லை. அவருடைய பல திருட்டுத்தனம் மற்றும் தப்பான தொழில் செய்வது பற்றி நான் தெரிந்து கொண்டதும் விலகி விட்டேன்.
அதன் காரணமாகத்தான் என் மீது அபாண்டமான பழியை போட்டு இப்படி என்னை வஞ்சம் தீர்க்க பார்த்து வருகிறார். இனிமேல், அவரை சும்மா விட மாட்டேன். அவருடைய அனைத்து வண்டவாளங்களையும் தண்டவாளத்தில் ஏற்றப் போகிறேன் என் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.