கொரோனா பாதித்த அஸ்வினால் இங்கிலாந்து செல்ல முடியுமா? : சோகத்தில் ரசிகர்கள்

Ravichandran Ashwin COVID-19
1 வாரம் முன்

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதியானதால் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்து கொள்ளும் இந்திய அணி பயணித்த விமானத்தில் அவர் செல்லவில்லை என கூறப்படுகிறது.

சிக்கலில் இந்திய அணி

கடந்த ஆண்டு, இந்திய, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன. நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன.

கொரோனா பாதித்த அஸ்வினால் இங்கிலாந்து செல்ல முடியுமா? : சோகத்தில் ரசிகர்கள் | Ravichandran Ashwin Tests Positive For Covid19

விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மீதமுள்ள போட்டி இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 16ஆம் தேதி லண்டன் சென்றனர். அஸ்வினுக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஸ்வினுக்கு கொரோனா

தேவையான வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகு, அவர் அணியுடன் இணைவார் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பே அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சரியான நேரத்தில் அவர் குணமடைய வேண்டும்" எனக் கூறியுள்ளனர்.

கொரோனா பாதித்த அஸ்வினால் இங்கிலாந்து செல்ல முடியுமா? : சோகத்தில் ரசிகர்கள் | Ravichandran Ashwin Tests Positive For Covid19

ஜூன் 24 தொடங்கி 28 வரை நடைபெறும் லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது. அந்த போட்டியில், அஸ்வின் பங்கேற்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் கைக்கொடுத்த அஸ்வின் - தப்பித்த இந்திய அணி   

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.