அப்படி ஒரு கோபத்தை டோனியிடம் பார்த்ததில்லை...அந்த நபரால் தான் ஆச்சு - அஸ்வின் ஓபன்டாக்!

MS Dhoni Ravichandran Ashwin Indian Cricket Team
By Swetha Jul 13, 2024 06:29 AM GMT
Report

டோனி கோபப்பட்ட தருணத்தை தமிழக வீரர் அஸ்வின் நினைவு கூர்ந்துள்ளார்.

டோனியின் கோபம்

மகேந்திர சிங் டோனி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். இவரை கேப்டன் கூல் என ரசிகர்கள் செல்லமாக அழைப்பதுண்டு.

அப்படி ஒரு கோபத்தை டோனியிடம் பார்த்ததில்லை...அந்த நபரால் தான் ஆச்சு - அஸ்வின் ஓபன்டாக்! | Ravichandran Ashwin Rewinds Angry Ms Dhoni

காரணம் மைதானத்தில் அழுத்தமாக இடங்களிலும் அமைதியாக இருந்து சாதித்து காட்டியவர். இந்த நிலையில், 2010ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த போட்டியில் டோனி கோபப்பட்ட சம்பவத்தை தமிழக வீரர் அஸ்வின் நினைவு கூர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, 2010ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடி கொண்டிருந்த டோனிக்கு நான் ட்ரிங்க்ஸ் எடுத்துச் சென்றேன். அப்போது ஸ்ரீசாந்த் எங்கே என கேட்டார். அவர் ஓய்வு அறையில் இருக்கிறார் என கூறினேன்.

தோனி 15 வருஷமா சொன்ன ஒரே அட்வைஸ், இப்போ தான் ஏன்னு புரியுது - அஸ்வின்!

தோனி 15 வருஷமா சொன்ன ஒரே அட்வைஸ், இப்போ தான் ஏன்னு புரியுது - அஸ்வின்!

அஸ்வின் ஓபன்டாக்

அவரை உடனடியாக வீரர்கள் அமரும் இடத்திற்கு வர சொல் என்றார். ஆனால் ஸ்ரீசாந்த அதை புறக்கணித்தார். அடுத்த முறை ஹெல்மெட்டுடன் மைதானத்துக்குள் செல்கிறேன். அப்போது டோனி கோபத்துடன் இருந்தார். அவர் அப்படி இருந்து நான் பார்த்ததில்லை. ஸ்ரீ எங்கே அவர் என்ன செய்கிறான் என மீண்டும் கேட்டார்.

அப்படி ஒரு கோபத்தை டோனியிடம் பார்த்ததில்லை...அந்த நபரால் தான் ஆச்சு - அஸ்வின் ஓபன்டாக்! | Ravichandran Ashwin Rewinds Angry Ms Dhoni

அவர் ஓய்வு அறையில் மசாஜ் செய்கிறார் என்று நான் அவரிடம் சொல்கிறேன். அதற்கு டோனி எதுவும் சொல்லவில்லை. அடுத்த ஓவரில், ஹெல்மெட்டைத் திருப்பித் தரும்படி என்னை அழைத்தார். அப்போது அமைதியாக இருந்தார். ஹெல்மெட் கொடுக்கும்போது, ஒரு காரியம் செய். ரஞ்சிப் சார் கிட்ட போங்க.

ஸ்ரீ-க்கு இங்கு இருக்க விருப்பமில்லை என்று சொல்லுங்கள். அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என கூறினார். நான் திகைத்துவிட்டேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் அவர் முகத்தையே பார்க்கிறேன். உடனே டோனி 'என்ன நடந்தது? உனக்கு நான் பேசும் ஆங்கிலம் புரியவில்லையா என கேட்டார்.

இதனை கேட்ட ஸ்ரீ உடனே எழுந்து உடைகளை அணிந்துகொள்கிறார். அதனை தொடர்ந்து ட்ரிங்க்ஸ் கொடுக்கும் கடமைகளை அவரே ஏற்றுக்கொள்கிறார். அடுத்த முறை டோனிக்கு ட்ரிங்க்ஸ் தேவைப்படும்போது, ஸ்ரீசாந்த் அங்கு இருப்பார் என்று எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.