விராட் கோலியிடம் அதெல்லாம் கஷ்டம்.. இது மட்டும் நடந்தா அவ்வளவுதான் - அஸ்வின் புகழாரம்!
விராட் கோலியின் பேட்டிங் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
விராட் கோலி
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2024 அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ள இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது. இந்த தொடரில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி 3 போட்டிகளில் விளையாடி வெறும் 5 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனால் அவர்மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அஸ்வின்
இந்நிலையில் விராட் கோலி குறித்து பேசிய இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் "விராட் கோலி போன்ற வீரரின் மன உறுதியை உடைப்பது என்பது இயலாத காரியம். அவரை மட்டும் ஃபார்மில் இல்லை என்று நம்பர் 3 வரிசைக்கு இறக்கினால் அவ்வளவு தான்.
நீ என்னை நம்பர் 3 வரிசையில் பேட்டிங் செய்ய இறக்கிட்டீங்க.. இப்போது எப்படி பேட்டிங் செய்யனும்னு நான் காட்டவா என்று கேட்டுக் கொண்டே மிரட்டுவார். டி20 உலகக்கோப்பை தொடரில் ரன்கள் சேர்ப்பாரா என்பதெல்லாம் ஒரு விஷயமே அல்ல.
என்னை பொறுத்தவரை அவர் எப்போதும் ஓடி ஓடி ரன்களை சேர்ப்பார். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் விராட் கோலி மிரட்டிவிடுவார். சூப்பர் 8 சுற்றில் விராட் கோலியிடம் இருந்து நிச்சயம் ரன்கள் வரப்போகிறது" என்று தெரிவித்துள்ளார்.