இது என்ன ஐ.பி.எல் மேட்ச்சா? ஒழுங்கா பார்த்து விளையாடணும் - முன்னாள் வீரர் கடும் கண்டனம்!!
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எளிதில் வீழ்த்தியது.
இந்தியா வெற்றி
முதல் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பௌலிங் எடுத்து ஆட்டத்தில் மொத்தமாக அயர்லாந்து அணியை உடைத்தது இந்தியா.
16 ஓவர்களில் வெறும் 96 ரன்களில் அயர்லாந்து அணி அவுட்டாக, பின்னர் எளிய இலக்கை துரத்தியது இந்தியா. ஓப்பனர்களாக களமிறங்கிய விராட் 5 பந்துகளை எதிர்கொண்டு 1 ரன்னில் வெளியேறினார்.
ரோகித் சர்மா அதிரடியாக விளையாட, மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் பண்ட். 36 பந்துகளில் 52 ரன்களை குவித்து retired hurt முறையில் வெளியேறினார் ரோகித். இந்தியா அணி 12 ஓவர்களில் இலக்கை எட்டியது.
இது ஐபிஎல் அல்ல..
அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து வழக்கம் போல சீனியர் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டார்கள். ரவிசாஸ்திரி இது குறித்து பேசும் போது, ரோகித் சர்மா ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆடவேண்டும்.
ஆடுகளத்தின் படி தனது ஆட்டத்தின் அணுகுமுறையை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப மாறுபட்ட ஷாட்களை விளையாட வேண்டும்.
இது ஐபிஎல் இல்லை. அதிக ரன்களை குவிக்கும் தார் சாலைகள் இங்கே இல்லை.
எனவே ஆடுகளத்தில் இருக்கும் வேகம் மற்றும் பவுன்ஸிற்கு தகுந்தார் போல், இயல்பை விட கூடுதலாக 3-4 பந்துகளை பார்த்து விளையாடி பின்னர் அதிரடியாக விளையாட வேண்டும் என்றார்.