கொட்டாவி விட்ட கேப்டன் - லைவ் மேட்ச்சில் மானத்தை வாங்கிய ரவி சாஸ்திரி!
இங்கிலாந்து கேப்டன் கொட்டாவி விட்டதும், அதற்கு ரவி சாஸ்திரி அளித்த பதில் வைரலாகி வருகிறது.
ENG vs IND
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
அப்போது கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார். வர்ணனை செய்து கொண்டிருந்த இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி,
லைவில் சிரிப்பலை
"காலை வணக்கம், பென்" என்று கூறினார். இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இரு அணிகளும் முதல் இன்னிங்ஸில் தலா 387 ரன்கள் எடுத்துள்ளன.
இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருப்பதால், லார்ட்ஸ் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.