மதுபோதையில் தூக்கம்; எலிகளால் 2 கால்களையும் இழந்த பெண் - பகீர் சம்பவம்!
எலிகள் கடித்ததால் பெண் ஒருவர் 2 கால்களையும் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அழுகிய கால்கள்
ரஷ்யாவை சேர்ந்த மரினா (60) என்ற வீடற்ற மூதாட்டி மதுபோதையில் ஆட்டுக் கொட்டகையில் படுத்து உறங்கியுள்ளார். அப்போது இவருடைய 2 கால்களையும் ஆட்டுக் கொட்டகையில் இருந்த எலிகள் கடித்து குதறியுள்ளது.
அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் மரினாவை பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மரினாவை மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கு முன்பே கால் தசைகள் அனைத்தும் அழுகிப் போயிருந்தது.
அதிர்ச்சி சம்பவம்
இதனால் வேறு வழியின்றி அவரது 2 கால்களையும் மருத்துவர்கள் வெட்டி எடுத்துள்ளனர். மரினாவுக்கு சொந்தமாக வீடு இல்லாத காரணத்தினால் அவர் வீடில்லாதவர்களுக்கான தங்குமிடத்தில் இருந்து வருகிறார்.
அவரது குடும்பத்தினரும் அவரை கண்டுகொள்வதில்லை. அவரோடு பேசுவதுமில்லை. அதனால் மெரினா வீதி வீதியாக சுற்றி அலைந்து கொண்டிருக்கிறார்" என தங்குமிடத்தின் இயக்குநர் கூறியுள்ளார்.