பார்த்தாலே பதறுது.. 4 அடி நீளம், மனித குழந்தை போல் இருக்கும் மான்ஸ்டர் எலி - ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!
உலகிலேயே நீளமான எலி பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எலி தொல்லை
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் எலிகளின் தொல்லை அதிகம். அங்கு உணவு தேடி எலிகள் அதிகமாக வீடுகளுக்குள் புகுந்து உலவுகிறது. கொரோனா காலத்தில், எலிகள் பல நாடுகளில் மோசமான சம்பவங்கள் பலவற்றை ஏற்படுத்தியது. சமீப காலமாக இந்த எலிகளின் அளவு அதிகரித்துள்ளது, ஒரு மனிதக் குழந்தைக்கு சமமாகி வருவதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த எலிகள் நகரங்களில் குப்பைத் தொட்டி, ரயில் பாதைகளுக்கு அடுத்ததாக, இந்த எலிகள் வாழ சரியான இடங்களைக் கண்டுபிடிக்கின்றன. அவைகளுக்கு இந்த இடங்களில் அதிகமான உணவு கிடைப்பதால் அவை இனப்பெருக்கம் செய்து பெரிதளவில் உள்ளது.
உலகின் 2வது பன்றி இதய மாற்று அறுவை சிகிச்சை.. உயிர்போகும் தருணத்தில் இருந்த நபரை காப்பாற்றிய டாக்டர்கள்!
4 அடி நீளம்
இந்நிலையில், அந்த எலிகள் நன்றாக உண்பதால் அவை பெரிதாகி வருகின்றன. அவற்றின் அளவு அதிகரித்து வருவதால், வீடுகளுக்குள் நுழைந்து, தங்களுக்கான உணவைத் தேடும் தைரியமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமீபத்தில், இந்த எலிகளின் தலைநகரம் என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் நியூயார்க்கில், மக்கள் 4 அடி நீளமுள்ள எலிகளை கண்டனர்.
இந்த ஊரில் 3 கோடி எலிகள் இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒரு தகவல் வந்திருந்தது. அதாவது நகரத்தில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இணையாக ஐந்து எலிகள் உள்ளன. இந்த 4 அடிக்கு மேல் உள்ள எலிகள் உணவு எளிதில் கிடைத்து, வயிறு நிரம்பிய பின், இனப்பெருக்கம் செய்து வருகின்றன.
இதன் காரணமாக அவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இது குறித்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.