4 நாள் பயணமாக பிரதமர் மோடி திடீர் அமெரிக்கா பயணம் - இதுதான் காரணம்?
அமெரிக்காவிற்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி ஜூன் 20ம் தேதி புறப்பட்டு 21 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளார். அதன்பின், 2 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
தொடர்ந்து, அதிபர் ஜோ பைடனைச் சந்தித்து இரு தரப்பு உறவு தொடர்பாக கலந்துரையாடுகிறார். மேலும், அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கவுள்ளனர்.
அமெரிக்கா பயணம்
இதற்கிடையில் அமெரிக்க துணை குடியரசுத் தலைவர் கமலா ஹாரிஸ், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளங்கன் ஆகியோர் இணைந்து அளிக்கும் மதிய விருந்திலும் கலந்துக் கொள்கிறார். அதனையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
23-ம் தேதி வரை அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு சென்று எகிப்து அதிபர், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரை சந்தித்து பேசவுள்ளார்.
அதிநவீன தொழில்நுட்பம் உள்ள 'எம்.க்யூ., - 9 பிரிடேட்டர்' எனப்படும் 'ட்ரோன்'களை 24,000 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடமிருந்து வாங்க, ராணுவ அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.