நான் தமிழக மக்களையும் சென்னையினையும் மிகவும் நேசிக்கிறேன் : பிரதமர் மோடி
சென்னை, மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
தமிழகத்தில் மோடி
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில் அழகிய வடிவில் கட்டப்பட்டுள்ள முனையத்தை தொடங்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்த பிரதமர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை–கோவை வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. இந்நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .
125 வது ஆண்டு விழா
இதனைத்தொடர்ந்து, ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
அதில் இந்த விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழ் மொழி மற்றும் தமிழ் பாரம்பரியத்தை மிகவும் விரும்புகிறேன் நான் தமிழக மக்களையும் சென்னையையும் மிகவும் நேசிக்கிறேன் என பேசிய பிரதமர்
வெற்றி நாயகனாக விவேகானந்தார் சென்னையில் வரவேற்கப்பட்டார் ராமகிருஷ்ண மடம் இளைஞர்களுக்கு நவீன தொழில் நுட்பம் மூலம் வழிகாட்டுவதாக பிரதமர் மோடி கூறினார்.