ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு குட் நியூஸ்; அரசு திடீர் அறிவிப்பு - கவனிச்சீங்களா!
ரேஷன் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ரேஷன் கார்டு
தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் ரேஷன்தாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, குறைதீர்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
இந்த முகாம்களில், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு அறிவிப்பு
இந்நிலையில், சமீப நாட்களாக ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளை அப்டேட் செய்யாமல் வைத்திருந்த ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது தடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மீண்டும் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதில், "ரேஷன் கார்டுதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் வரும் ஜனவரி 20ம் தேதி குறைதீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் மொபைல் எண் அப்டேட், பயோமெட்ரிக் அப்டேட் போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம்.
இது மட்டுமல்லாமல், இந்த முகாமின் மூலமாக பொதுமக்கள் ரேஷன் பொருட்கள், ரேஷன் கடை மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் புகார் அளிக்கலாம்.
எனவே, காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறவேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.