ரேஷன் கார்டில் இதை செய்யவில்லையென்றால் கேன்சலாகிடும் - அரசு முக்கிய அறிவிப்பு!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ரேஷன் கார்டு
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் கார்டுக்கு 20 கிலோ வரை இலவச அரிசி மத்திய அரசு சார்பில் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
இலவச அரிசி பெறும், கார்டுதாரர்களின் குடும்ப தலைவர், உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் எண், கைரேகை, கண் புருவம் போன்றவற்றை அந்தந்த ரேஷன் கடைகளில் பதிவு செய்து, (இ- கே.ஓய்.சி.,) அனுப்ப மத்திய அரசு அறிவித்திருந்தது.
முக்கிய அறிவிப்பு
தொடர்ந்து அனைத்து உறுப்பினரின் விரல் ரேகையையும் பதிவு செய்து, ஆதார் சரிபார்ப்பு வாயிலாக உறுதி செய்யப்படுகிறது. இந்த பணிகளை, வரும் மார்ச் 31க்குள் முடிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் அவர்களுக்கு இலவச அரிசி ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் சரிபார்க்கப்பட வேண்டிய, 3.65 கோடி உறுப்பினர்களில்,
இதுவரை, 2.80 கோடி பேர் பதிவு செய்துள்ள நிலையில், 76 லட்சம் பேர் பதிவு செய்யாமல் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.