இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது - மத்திய அரசு நிறுத்தம்!

Tamil nadu Karnataka
By Sumathi Jun 16, 2023 05:01 AM GMT
Report

இலவச உணவு தானியங்கள் வழங்குவது குறித்து மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலவச உணவு தானியம்

பல மாநிலங்களில் இலவச ரேஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மக்கள் பலர் பலனடைந்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ் சென்ட்ரல் பூல்லில் இருந்து

இனி ரேஷன் கடைகளில் அரிசி கிடையாது - மத்திய அரசு நிறுத்தம்! | Ration Card Holder Central Govt Announced Update

மாநில அரசுகளுக்கு அரிசி மற்றும் கோதுமை விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளது. மேலும் திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் கீழ், வடகிழக்கு மாநிலங்கள், மலைப்பிரதேச மாநிலங்கள் மற்றும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,400-க்கு விற்பனை செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிறுத்தம்

மத்திய அரசு உடனான ஒப்பந்தத்தின் கீழ், நுகர்பொருள் வாணிப கழகம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல், அரிசியாக மாற்றப்பட்டு, தமிழகத்திற்கான ஒதுக்கீட்டில் ஈடுசெய்யப்படுகிறது.

வெளிச்சந்தை திட்டத்தின் கீழ் அரிசி விற்பனையை நிறுத்தினாலும், தமிழக ரேஷன் வினியோகத்தில் பாதிப்பு ஏற்படாது என உணவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கர்நாடகா மாநிலத்தில் இலவச உணவு தானியங்களை வழங்க பாதிப்பு ஏற்படும்.