'ரத்த கொதிப்பு ரத்த கொதிப்பு' - சத்தமாக ஒலித்த ரிங்டோன்.. கடுப்பான சீமான்!

Naam tamilar kachchi Tamil nadu Chennai Seeman
By Jiyath Mar 27, 2024 10:51 AM GMT
Report

செய்தியாளர் சந்திப்பின் போது ஒலித்த "ரத்த கொதிப்பு" பாடலின் ரிங்டோன் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகளை கடும் கோபமடைய வைத்தது. 

நாம் தமிழர் கட்சி

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு 2019, 2021 தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இதனையே நாம் தமிழர் கட்சியினர் தங்களது நிரந்தர சின்னமாக கருதி வந்தனர்.

இதனிடையே தற்போதைய மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இந்த சின்னம் வேறு மாநில கட்சியான பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இது நாம் தமிழர் கட்சியை கடும் அதிருப்தியடைய வைத்தது.

இதனையடுத்து சட்டப்போராட்டங்களை நடத்தியும், நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. இதற்கான பெரும் போராட்டத்துக்கு பிறகு 'மைக்' சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

'இத்தோட நிறுத்திக்கணும்' - துரைமுருகனிடம் நேரில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

'இத்தோட நிறுத்திக்கணும்' - துரைமுருகனிடம் நேரில் சிக்கிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி!

கோபமடைந்த சீமான் 

இந்நிலையில் இன்று சின்னத்தை அறிமுகப்படுத்தி செய்தியாளர்களைச் சந்தித்தார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினரை கொதிக்க வைத்துவிட்டது.

சீமான் மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தி பேசத் தொடங்கினார். அப்போது சீமானின் பின்னால் நின்றிருந்த ஒருவரின் செல்போன் ரிங் டோன், 'ரத்த கொதிப்பு எங்க மாமனாருக்கு ரத்த கொதிப்பு' என்ற பாடலுடன் சப்தமாக அலறியது. இதனால் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மிகவும் கோபமடைந்தனர். உடனே அந்த நபரும் அங்கிருந்து வேகமாக வெளியேறினார்.