ரத்தன் டாடா உயில் - இறுதி வரை இருந்த சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்து!

TATA India Businessman Mumbai Ratan Tata
By Swetha Oct 25, 2024 10:15 AM GMT
Report

மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா எழுதிய உயில் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

ரத்தன் டாடா

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா (Ratan Tata) 1990 முதல் 2012 வரை டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்தார். டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, 86, சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.

ரத்தன் டாடா உயில் - இறுதி வரை இருந்த சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்து! | Ratan Tata Shares His Crore Worth Property Butler

அவருக்கு சொத்துக்கள் அதிகம். அந்த சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருக்கிறார். அதன் விவரங்கள், ரத்தன் டாடாவின் ரூ.10,000 கோடிக்கு மேலான சொத்துக்களில் இருந்து பெரும்பகுதி டாடா அறக்கட்டளைக்கு செல்லும்.

அவருக்கு கடைசி காலத்தில் மிகவும் நெருக்கமாக இருந்த உதவியாளர் சாந்தனு நாயுடு, அவரது சகோதரர் ஜிம்மி டாடா, ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரீன் மற்றும் டீன்னா (தாயின் இரண்டாது திருமணத்தின் மூலம் பிறந்தவர்கள்) ஆகியோருக்கு சொத்துக்கள் கிடைக்கும்படி செய்துள்ளார்.

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா? அவரே கொடுத்துள்ள விளக்கம்

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட ரத்தன் டாடா? அவரே கொடுத்துள்ள விளக்கம்

சொத்து

ரத்தன் டாடாவிடம் நீண்ட நாளாக வேலை பார்த்து வருபவர் ராஜன் ஷா. இவருக்கு தனியாக சொத்துக்களை எழுதி வைத்துள்ள டாடா, தன் வளர்ப்பு நாயான டிட்டோவை ராஜன் ஷா கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

ரத்தன் டாடா உயில் - இறுதி வரை இருந்த சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கு சொத்து! | Ratan Tata Shares His Crore Worth Property Butler

அதற்கு ஆகும் செலவுகளை ஈடுகட்டும் வகையில் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். தன்னிடம் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சமையல்காரராக இருக்கும் சுப்பையாவுக்கும் சொத்துக்களை டாடா எழுதி வைத்துள்ளார்.