ரத்தன் டாடாவின் கை கூடா காதல் - திருமணம் செய்யாததன் பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

TATA United States of America Mumbai Ratan Tata
By Karthikraja Oct 10, 2024 09:17 AM GMT
Report

ரத்தன் டாடா தனது முன்னாள் காதல் குறித்து பகிர்ந்துள்ளார்.

ரத்தன் டாடா

பிரபல தொழிலதிபரும் டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா(86) நேற்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

ratan tata

இறுதி அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல் இன்று இரவு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது. 

ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சாம்ராஜ்ஜியம் - ஆளப்போகும் மாயா டாடா யார்?

ரத்தன் டாடாவின் ரூ.3800 கோடி சாம்ராஜ்ஜியம் - ஆளப்போகும் மாயா டாடா யார்?

தந்தையுடன் மனக்கசப்பு

கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த ரத்தன் டாடா, அவரது சிறு வயது வாழ்க்கை, காதல் குறித்து அளித்த நேர்காணல் தற்போது வைரலாகி வருகிறது. அது குறித்து பேசிய ரத்தன் டாடா எங்களுடைய குழந்தை பருவம் நன்றாக சென்றது. ஆனால், எங்களது பெற்றோரின் விவாகரத்திற்கு பின்பு நானும், என்னுடைய சகோதரரும் நிறைய கஷ்டங்களை அனுபவித்தோம். அதன் பின் பாட்டியின் அரவணைப்பில்தான் வளர்ந்தோம். 

ratan tata young photo

என் தாய்க்கு 2வது திருமணம் நடைபெற்ற போது, பள்ளிகளில் எங்களை கிண்டல் செய்து பேசுவார்கள். ஆனால், அந்த நேரத்தில் எங்களுடைய பாட்டி சண்டை போட கூடாது, ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை செய்வார்.

எனக்கும் என்னுடைய தந்தைக்கும் நிறைய விஷயங்களில் மனக்கசப்புகள் இருந்தன. நான் வயலின் கற்க நினைத்த போது, அவர் என்ன பியானோ கற்க வேண்டும் என்றார். படிப்பதற்கு அமெரிக்க செல்ல நினைத்த போது, அவர் என்னை பிரிட்டன் போக சொன்னார். கட்டிட வடிவமைப்பாளர் ஆக நினைத்த போது, பொறியாளர் ஆக வேண்டும் எனக் கூறினார்.

காதல்

ஆனாலும் தனது விருப்பப்படியே அமெரிக்கா சென்று அங்குள்ள கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்துள்ளார். அமெரிக்காவில் இருந்த போது அங்கு தனது மனதுக்கு பிடித்த பெண்ணுடன் ரத்தன் டாடா காதல் வயப்பட்டுள்ளார். 

ratan tata young photo

அந்த பெண்ணை திருமணம் செய்ய நினைத்த போது, ரத்தன் டாடாவின் பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்தியா திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அப்போது இந்தியா சீனா போர் நடைபெற்று கொண்டிருந்ததால் அந்த பெண்ணின் பெற்றோர் அவரை இந்தியா செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவரது காதல் முறிந்துள்ளது.

அதன் பிறகு காதல் வயப்படவில்லையா என்ற கேள்விக்கு 4 முறை காதல் வந்ததாகவும், பல முறை திருமணத்திற்கு அருகில் சென்றும் சில காரணங்களால் திருமணம் கைகூடவில்லை என தெரிவித்துள்ளார். பல நேரங்களில் தனிமையை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், திருமணம் செய்யாதது குறித்து வருத்தப்பட்டுளீர்களா என்ற கேள்விக்கு "பல முறை" என பதிலளித்தார்.