சாப்பிட இருந்த சாம்பாரில் இறந்த நிலையில் மிதந்த எலி - மாணவர்கள் குமட்டல்..!
உத்தர பிரதேசத்தில் மருத்துவக் கல்லுாரி ஒன்றில் மாணவர்கள் சாப்பிட இருந்த சாம்பாரில் எலி ஒன்று இறந்த நிலையில் மிதந்தை கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சாம்பாரில் மிதந்த எலி
உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் நகரில் ரமா மருத்துவக் கல்லுாரி ஒன்று இயங்கி வருகிறது. இங்குள்ள உணவகத்தில் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு சமீபத்தில் சாதம், சாம்பார், புளிக் குழம்பு உள்ளிட்டவை தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து தயார் நிலையில் இருந்த உணவுகள் பரிமாறப்பட்டது. அப்போது சாம்பாரில் எலி ஒன்று மிதப்பதை பார்த்து மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிலர் குமட்டினர்.
நடவடிக்கை எடுக்காத கல்லுாரி நிர்வாகம்
சாம்பாரில் எலி மிதந்தை கல்லுாரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து உணவில் எலி கிடந்ததை தங்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்த மாணவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.