அவர் தான் காதலர் - பளிச்சென சொன்ன ரஷ்மிகா மந்தனா..!
சில தினங்களாவே நடிகை ரஷ்மிகா திருமணம் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.
ராஷ்மிகா - விஜய்
இந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.
கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்த நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது.
திருமணம்?
சமீபத்தில், இந்த ஜோடி விடுமுறைக்காக மாலத்தீவு சென்ற புகைப்படங்கள், இருவரும் சுப நிகழ்ச்சிகளை ஒரே வீட்டில் கொண்டாடியதாக பரவிய புகைப்படங்கள் போன்றவை வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இருவரின் திருமணத்திற்கு வீட்டார்கள் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும், பிப்ரவரி 2வது வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி நேற்று முதல் பெரும் வைரலானது.
அப்படி தான் இருக்கனும்
இந்த செய்திகள் உலாவரும் அதே நேரத்தில் தான்,தற்போது ரஷ்மிகா மந்தனா பேசிய பழைய வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், உங்களுடைய காதலர் எப்படி இருக்க வேண்டும் என கேள்வியை ரஷ்மிகாவிடம் கேட்க, அவர் கண்டிப்பாக சிகரெட் பிடிக்கும் பழக்கமோ, மதுவுக்கு அடிமையாகவோ இருக்கக்கூடாது என்று பளிச்சென கூறினார்.
மேலும், எப்போதாவது பார்ட்டியில் சோஷியல் ட்ரிங்கராக இருந்தால் ஓகேதான் என்றும், உண்மையாகவும், அன்பாகவும் vibe set ஆகும் வகையில் இருக்க வேண்டும் என்று பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.