ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா திருமணம் - தேதி இதுதான்?
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்மிகா-விஜய்
முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவர கொண்டாவும் கடந்த சில ஆண்டுகளாக டேட்டிங் செய்து வந்தனர்.

தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து இருவரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
திருமணம்
மேலும், இவர்களது திருமணம் பிப்ரவரி 26 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெறும் என கூறப்படுகிறது. திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள்.
உதய்பூரில் திருமணம் முடிந்ததும், ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராஷ்மிகா,
'திருமணத்தை நான் உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால் சரியான நேரத்தில் நாங்களே அறிவிப்போம்' என்று சூசகம் தெரிவித்திருந்தார்.