பிரியங்கா காந்தி மகனுக்கு நிச்சயதார்த்தம் - பொண்ணு யாரு பாருங்க..
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி வதேராவுக்கு ரெஹான் (24) என்ற மகனும், மிரய்யா என்ற மகளும் உள்ளனர்.
ரைஹான் வத்ரா
இதில் ரைஹான் வத்ராவுக்கும், அவரது நீண்டகால தோழியான அவீவா பைக்கிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அவீவா பைக் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞர் மற்றும் 'அடெலியர் 11' என்ற கலை நிறுவனத்தின் இணை நிறுவனர்.

ரெஹான் தன்னுடன் பள்ளியில் பயின்ற வகுப்புத் தோழியான அவிவா பெய்கை மணக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த ஏழு வருடங்களாக காதலித்து வருவதாகத் தெரிகிறது. அவிவாவின் தந்தை இம்ரான் டெல்லியின் தொழில் அதிபர்.
நிச்சயதார்த்தம்
தாயான நந்திதா பெய்க் பிரபல டிசைனராக உள்ளார். அவிவாவும், ரெஹானைப் போலவே ஒரு புகைப்படக் கலைஞர். மேலும், கால்பந்து வீராங்கனையாகவும் இருந்த அவர் தேசிய அளவிலானப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தானின் ரத்தம்போரில் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணத் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. டெல்லியின் ஆரம்பக் கல்வியை முடித்த ரெஹான் தனது உயர் கல்வியை டெகர்டூனிலும், லண்டனிலும் பயின்றவர்.
தனது தாய் பிரியங்காவின் அரசியல் சுற்றுப் பயணங்களிலும் ரெஹான் அடிக்கடி காணப்படுகிறார். இருப்பினும், அவர் அரசியலில் இருந்து விலகியே இருக்கிறார்.