நின்ற திருமணம்; இப்பவும் நாங்க அப்படிதான் - ராஷ்மிகாவின் முன்னாள் காதலன் தகவல்!
ராஷ்மிகா குறித்து அவரது முன்னாள் காதலன் பேசியுள்ளார்.
ராஷ்மிகா
தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.
2016-ம் ஆண்டு வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதில் இவருக்கு ஜோடியாக ரஷித் ஷெட்டி என்ற கன்னட நடிகருடன் காதலில் விழுந்தார். பல மாதங்கள் இருவரும் டேட் செய்தனர்.
முன்னாள் காதல்
திருமணம் வரை சென்ற உறவில் 2018ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரேக் அப் செய்துவிட்டனர். இந்நிஅலியில், நடிகர் ரக்ஷித் ஷெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்,
"ராஷ்மிகாவும் நானும் தற்போது கூட மெசேஜ் செய்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். படங்கள் வெளிவரும் போது ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வோம். ராஷ்மிகாவிற்கு திரையுலகில் பல கனவுகள் இருக்கிறது. அதை அவர் சரியாக புரிந்துகொண்டு தற்போது நேஷனல் க்ரஷ் ஆகியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.