ஏற்கனவே காதலருடன் நிச்சயதார்த்தம்.. இப்போ நான்தான் சொல்லனும் - ராஷ்மிகா பளீச்!
காதல் குறித்து நடிகை ராஷ்மிகா மனம் திறந்துள்ளார்.
ராஷ்மிகா
தெலுங்கு சினிமாத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா. இவர் தெலுங்கு தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழிலும் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி விட்டார்.
ராஷ்மிகா 2016-ம் ஆண்டு வெளிவந்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதில் இவருக்கு ஜோடியாக ரஷித் ஷெட்டி என்ற கன்னட நடிகருடன் காதலில் விழுந்தார். பல மாதங்கள் இருவரும் டேட் செய்தனர்.
காதல்
அதன் பிறகு, சமூகவலைத்தளத்தில் ரஷ்மிகா, ரக்ஷித்தை காதலிப்பதாக பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு இருவருக்கும் விமரிசையாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால். 2018ல் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரேக் அப் செய்துவிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, ராஷ்மிகா கீதா கோவிந்தம் படத்திலும் அதற்கு பின்னர் வொர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்திலும் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து வெளியானது தான் டியர் காம்ரேட். அதன்பின் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா காதல் கிசுகிசுக்கள் இன்றுவரை வெளியான வண்ணம் உள்ளது.
ஆனால் ரஷ்மிகா இதைப் பற்றி ‘யாரை காதலிக்கிறேன் என்று நானாக வெளிப்படையாக கூறும் வரை அது உண்மை இல்லை’ என்று மிக வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.