நான் விஜயோடு இருப்பது...பலருக்கும் பொறாமை தான் - ராஷ்மிகா மந்தனா
தன்னை கண்டு பல பெண்களுக்குமே பொறாமை இருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா
கன்னட மொழி படமான "கிரக் பார்ட்டி" படத்தில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா அதனை தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்தார்.

வரிசையாக அவர் நடித்த கீதா கோவிந்தம், பீஷ்மா, புஷ்பா போன்ற வெற்றி படமாக அமைய நேஷனல் கிரஷ் என்ற பட்டத்தை பெற்றார். அண்மையில் ஹிந்தியில் ரன்பீர் கபூருடன் நடித்த 'அனிமல்" படமும் பெரிய வசூலை பெற்றது.
பொறாமை
தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் ராஷ்மிகாவின் பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அந்த பேட்டியில், தான் இரண்டாவது முறையாக டியர் காம்ரேட் படத்தில் விஜய் தேவராக்கொண்டவுடன் நடித்தது பல பெண்களுக்குமே பொறாமை தான் என்று கூறினார்.
ஏற்கனவே இருவர் குறித்தும் காதல் கதைகள் வேகமாக பரவிய நிலையில், டியர் காம்ரேட் படம் வெளியீட்டின் போது, ராஷ்மிகா மந்தனா இவ்வாறு பேசியது பெரும் வைரலானது.
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil