கூடவே இருந்து குழி பறித்த மேனேஜர்...80 லட்சம் மோசடி - கதறும் நடிகை ராஷ்மிகா..!

Tamil Cinema Rashmika Mandanna Tamil Actress
By Thahir Jun 20, 2023 07:48 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இருந்து அவரது மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்த சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

படப்பிடிப்பில் பசியாக இருக்கும் ராஷ்மிகா 

தமிழ், தெலுங்கு,கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக இவர் நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய திரைப்படங்கள் ராஷ்மிகாவுக்கு நேஷனல் கிரஷ் என்ற பட்டத்தையும் பெற்றுத்தந்தது.

நடிகை ராஷ்மிகா தற்போது அனிமல் என்கிற இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

did rashmika mandanna manager money cheated her

இப்படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கி உள்ளார். அனிமல் திரைப்படத்தின் ஷுட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டுவர உள்ளன.

தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.

ரூ.80 லட்சம் மோசடி செய்த மேனேஜர் 

அதேபோல் தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ரெயின்போ என்கிற திரைப்படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார் ராஷ்மிகா.

இப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக சமந்தாவுடன் சாகுந்தலம் படத்தில் நடித்த மலையாள நடிகர் தேவ் மோகன் நடிக்கிறார்.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகாவின் மேனேஜராக பணியாற்றி வந்த நபர் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

did rashmika mandanna manager money cheated her

நடிகை ராஷ்மிகாவிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்த மேனேஜரை உடனடியாக நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.