விஜய்யுடன் காதலில் பிரபல நடிகை - ரகசியத்தை போட்டுடைத்த படக்குழு!
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ராஷ்மிகா
தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா. இவரும் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக பல தரப்பிலிருந்து கிசு கிசுக்கள் எழுந்து வருகிறது.
கீதா கோவிந்தம் படத்தில் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்கள். டியர் காம்ரேட் படத்திலும் இந்த ஹிட் ஜோடி இணைந்தது. ஆனால் இதுகுறித்து இருவரும் வாய் திறக்கவில்லை.
காதல் உறுதி?
இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பாலகிருஷ்ணாவின் ரியாலிட்டி ஷோவில் நடைபெற்றது. அதில், பாலகிருஷ்ணா, ரன்பீர் கபூர் இருவரும் சேர்ந்துக் கொண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு போன் போட்டுக் கொடுத்து ராஷ்மிகாவை பேசவைத்தனர்.
அப்போது வெட்கப்பட்டுக்கொண்டே அமைதியாக பேசினார். உடனே ரன்பீர், அவங்களோட கன்னத்துல பிளஷ் வருது பாருங்க எனக் கூறி கிண்டலடித்து காதலை உறுதியே செய்துவிட்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.