என்னை ஆம்பள மாதிரி இருக்கிறேன்னு சொல்கிறார்கள்... - மனவேதனையில் ராஷ்மிகா...!

Rashmika Mandanna
By Nandhini 1 வாரம் முன்

நான் உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி இருக்கிறேன் என்று சொல்வதால் நான் மிகுந்த மனவேதனையில் உள்ளேன் என்று நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. பாக்ஸ் ஆபீசில் ‘வாரிசு’ படம் கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்துள்ளது.

actress-rashmika-mandanna-sad

மனவேதனையில் ராஷ்மிகா

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ராஷ்மிகாவுக்கு எதிராக இணையத்தில் தொடர்ந்து அவ்வப்போது ஏதாவது செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

அடுத்தடுத்து ராஷ்மிகாவை டார்கெட் செய்யும் விதமாக ட்ரோல்கள் வெளியானது. இது குறித்து ரஷ்மிகா மனம் திறந்து தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

நான் உடற்பயிற்சி செய்தால் பையன் மாதிரி தோற்றமளிப்பதாக சிலர் கூறுகிறார்கள். இல்லையென்றால் குண்டாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள்.

பேசாமல் இருந்தால் திமிரு என்று குறை கூறுகிறார்கள். எது செய்தாலும் குறை கண்டுபிடிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சினிமாவை விட்டு விலகிவிட வேண்டும் என்று நினைக்கிறார்களா என்பது எனக்கு தெரியவில்லை. என்னிடம் உங்களுக்கு என்ன பிரச்சனை.

உங்களுடைய வார்த்தைகளால் நான் மிகவும் மன ரீதியாக புண்பட்டுள்ளேன் என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் ரஷ்மிகாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவரின் பெயரை கெடுப்பதற்காக சிலர் சூழ்ச்சி செய்து பொய்யான தகவல்களை பரப்புவதாக சொல்லப்படுகிறது.