அடுக்கடுக்கான பாலியல் வன்கொடுமை புகார்கள் - பிரபல நடிகருக்கு 90 ஆண்டுகள் சிறை!
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் கூடைப்பந்தாட்ட வீரருக்கு 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
ரஷித் பைர்ட்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரஷித் பைர்ட். சர்வதேச கிளப்களின் முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரரான இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் பெண்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு 90 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வழக்குகள்
இதுதொடர்பாக பேசிய லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்த்துறையை சேர்ந்த தலைமை அதிகாரி "தனது புகழை பயன்படுத்தி பிரபலமாக இருந்துவந்த ரஷித் பைர்ட் மீது நாளடைவில் அதிக எண்ணிக்கையிலான பாலியல் புகார்கள் எழுந்து வந்தன. தற்போது அதற்கு முடிவு கிடைத்துள்ளது.
தவறுகளை இழைத்த அவருக்கு இனி சுதந்திரமாக நடமாட முடியாது" என்று தெரிவித்துள்ளார். ரஷித் பைர்ட் மீது கடந்த 2010-ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2005-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.