18 வயதுதான்.. களத்திலேயே சுருண்டு விழுந்த பிரபல வீரரின் மகன் - மாரடைப்பால் பரிதாபம்!
புரோணி ஜேம்ஸ் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புரோணி ஜேம்ஸ்
அமெரிக்க தேசிய கூடை பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பிரபலமானவர் லெப்ரான் ஜேம்ஸ். இவரது மகன் புரோணி ஜேம்ஸ்(18). இவர் கல்லூரியில் நடைபெறும் கூடைப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது களத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
அதனையடுத்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து லெப்ரான் ஜேம்ஸ், புரோனி ஜேம்ஸ் இன் உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
மாரடைப்பு
தீவிர கண்காணிப்பு பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த கடினமான சூழ்நிலையில் அவரை ரசிகர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம். அடுத்தடுத்த அறிவிக்கைகளை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவோம்.
தனது மகனை உரிய நேரத்தில் காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளார்.