இயற்கைக்கு மாறாக.. மூச்சுத்தினறி உயிரிழந்த 8 வயது சிறுமி - 3 பேருக்கு தூக்கு தண்டனை!
சிறுமியை கொலை செய்த வழக்கில் 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசிங்(30). முகேஷ்சிங் (28), மணீஷ் திர்கி (27) மற்றும் முனீம் சிங் திருவாயிலு கிராமத்தில் உள்ள ஓடு தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.
இங்கு ஒரு தம்பதியும் வேலை செய்து வந்துள்ளனர். இவர்களது மகள் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இந்த 4 பேரும் சிறுமிக்கு சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளனர். பின் நாங்கள் உனது தந்தையின் நண்பர்கள் தான்.
அவர் உன்னை அழைத்து வர கூறினார் என சொல்லி காரில் ஏற்றிக்கொண்டு பாழடைந்த கட்டிடம் அருகே நிறுத்தியுள்ளனர். தொடர்ந்து 3 பேர் சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இயற்கைக்கு மாறான ஈடுபட்டு கழுத்தை நெரித்துள்ளனர். இதில் மூச்சுத்திணறி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
3 பேருக்கு தூக்கு
உடனே அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதையறிந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 இளைஞர்களை கைது செய்தனர். முனீம் சிங் இன்னும் தலைமறைவாக உள்ளார்.
இதுதொடர்பாக நடந்து வந்த வழக்கில், சிறுமியை கற்பழித்து கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் ஜெயசிங், முகேஷ்சிங், மணீஷ் திர்கி ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனையும்,
தலா ரூ.1.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.