14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் - பாலியல் வன்கொடுமையின் போது மாரடைப்பு
சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த போது மேலாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
14 வயது சிறுமி
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர், வேலையில்லாத சகோதரர் என குடும்பத்தின் பாரத்தை 14 வயதிலே சுமந்த சிறுமி, குஜராத்தில் உள்ள தனியார் வைர நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அங்கு மேலாளராக பணி புரியும் 41 வயது நபர் அந்த சிறுமியின் குடும்பத்திற்கு அடிக்கடி நிதி உதவி அளித்து வந்துள்ளார்.
பாலியல் வன்புணர்வு
இந்நிலையில் சில தினங்களுக்கு முன், தன்னுடன் மும்பைக்கு வர வேண்டும் என்றும், வராத பட்சத்தில், குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்துவதாக கூறி மிரட்டியுள்ளார். குடும்ப சூழ்நிலையால் சிறுமியின் தாயார் மேலாளருடன் மும்பை செல்ல அனுமதித்தனர்.
அக்டோபர் 31 ஆம் தேதி, மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த சிறுமி தன் மகள் என பொய் சொல்லி போலி ஆதார் கார்டை பயன்படுத்தி ரூம் எடுத்துள்ளார்.
அதன் பின் நவம்பர் 2ஆம் தேதி வரை வயகரா போன்ற மாத்திரைகளை உட்கொண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாலியல் வன்புணர்வின் போது அந்த முதியவர் மயங்கி விழுந்துள்ளார்.
மாரடைப்பு
உடனடியாக சிறுமி ஹோட்டல் ஊழியர்களிடம் உதவி கோரியதையடுத்து, மேலாளரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாயாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற உடன் அவர் மும்பை வந்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.