16 வயது சிறுமியை சீரழித்த காதலன், சித்தப்பா - 6 மாதமாக தொடர்ந்த கொடூரம்!
16 வயது சிறுமியை காதலனுடன் சித்தப்பாவும் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கரூர், மேட்டு மகாதானபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோட்டக்கரையான்பட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரியசாமி (60) என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை கண்ட சிறுமியின் சித்தப்பா இடும்பன் (31) பெரியசாமியை தொடர்ந்து அவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ் என்பவருக்கும் சிறுமிக்கும் இடையே
அதிர்ச்சி சம்பவம்
பழக்கம் ஏற்பட்டு அவரும் சிறுமியிடம் பாலியல் ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரணையில், 6 மாதங்களாக இவர்கள் 3 பேரும் சிறுமியை வன்கொடுமை செய்து வந்தது தெரிய வந்தது.
அதனையடுத்து புகாரின் பேரில் மகளிர் போலீசார் 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.