ரெடியா இருங்க..! நாள் முழுக்க இலவச பயணம் அறிவித்த Rapido - எப்போ தெரியுமா?
தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ (Rapido) நிறுவனம் அறிவித்துள்ளது.
ரேபிடோ
தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் வரும் 28ம் தேதி மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது.
எனவே தெலுங்கானாவில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அம்மாநிலத்தில் தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ (Rapido) நிறுவனம் அறிவித்துள்ளது.
இலவச சேவை
இந்த சேவையை ஐதராபாத்தில் உள்ள மையங்களுக்கு வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பை அதிகரிக்கவும், பொது மக்களின் சிரமங்களை குறைக்கவும் இந்த இலவச சேவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேபிடோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.