ஆணவ படுகொலை அக்கறை தான்; வன்முறை இல்லை - நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு

Ranjith
By Karthikraja Aug 10, 2024 05:39 AM GMT
Report

 ஆணவப்படுகொலை தொடர்பாக நடிகர் ரஞ்சித் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

கவுண்டம்பாளையம்

இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. அதை தொடர்ந்து, நேற்று சேலத்தில் உள்ள திரையரங்கில் நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் படத்தை பார்த்த பின் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். 

ranjith

அப்பொழுது அவர் பேசியதாவது, கவுண்டம்பாளையம் என்பது ஒரு ஊர் பெயர். கவுண்டம்பாளையம் ஒரு சாதி படம் அல்ல. இது ஒரு தகப்பனின் வலியை சொல்லும் படம். மக்களாகிய நீங்கள் தான் என்னை ஆதரிக்க வேண்டும். என பேசியுள்ளார். 

ஆமா நான் சாதி வெறியன் தான் சமூக நீதி பற்றி பேசினா கோபம் வரும் - ரஞ்சித் ஆவேசம்

ஆமா நான் சாதி வெறியன் தான் சமூக நீதி பற்றி பேசினா கோபம் வரும் - ரஞ்சித் ஆவேசம்

ஆணவக்கொலை

அப்பொழுது ஆணவப்படுகொலை தொடர்பாக செய்தியாளர்களை அளித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஞ்சித், “பெற்றவர்களுக்கு தான் வலி தெரியும், பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? ஒரு செருப்பு காணாமல் போன கூட கோபப்படுகிறோம். 

ranjith

அப்படி இருக்கும் போது வாழ்க்கையே பெற்ற பிள்ளைகள் தான் என இருக்கும் பெற்றோர்களுக்கு அந்த பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கப்பட போகிறது என்னும் பொது வரும் கோவம் அக்கறையினால் தான் வருகிறது. அது வன்முறையோ, கலவரமோ அல்ல. எது நடந்தாலும் அது நல்லதோ கெட்டதோ அக்கறையினால் தான் நடக்கிறது” என பேசியுள்ளார்.

சாதி ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், நடிகர் ரஞ்சித் ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.