ஆமா நான் சாதி வெறியன் தான் சமூக நீதி பற்றி பேசினா கோபம் வரும் - ரஞ்சித் ஆவேசம்
சமூக நீதி திருமணம் பற்றி பேசினால் கோபம் வருவதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
ரஞ்சித்
கோவை கோனியம்மன் திருக்கோவிலில் திரைப்பட இயக்குநரும் பிரபல நடிகருமான ரஞ்சித் தன் படக் குழுவினருடன் சாமி தரிசனம் செய்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித் தான் இயக்கி வெளி வரவுள்ள கவுண்டம்பாளையம் படம் வெளியீடு குறித்து பேசினார்.
அவர் பேசியதாவது, நாடக காதலில் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்களின் கண்ணீரை மையப்படுத்தி படம் எடுத்துள்ளேன். பணக்கார பிள்ளைகளை குறிவைத்து நடத்தும் காதல் நாடக காதல் தான்.
நாடக காதல்
பெற்றவர்கள் கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளையை தூக்கி கொண்டு போவது தான் சமூக நீதியா? செல்போன் செருப்பு காணாமல் போன கூட புகார் கொடுக்கிறோம். ஆனால் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. 4 பேர் கையெழுத்து போட்டு வைத்தால் அது திருமணம் ஆகிவிடுமா. வளர்த்த பெற்றோரின் நிலை என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் சமூக நீதி என கூறிக்கொள்பவர்கள் முதலில் தன் வீட்டில் ஒரு சுயமரியாதை திருமணம் செய்து வைத்து விட்டு அதன் பிறகு சமூக நீதி பற்றி பேசட்டும். அப்படி பண்ண மாட்டார்கள். பெற்றோர் இல்லாமல் எந்தவொரு திருமணமும் நடக்கக் கூடாது. அப்படி சட்டம் கொண்டு வர வேண்டும்.
நான் நாடக காதல் என்று சொல்லும் போது மட்டும் என்னை சாதி வெறியனாக பார்க்கிறார்கள். என் படத்தின் மீது யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அவர்கள் எல்லாம் நாடக காதலை ஆதரிப்பவர்கள்.
கள்ளச்சாராயம்
கள்ளச்சாராயம் விற்பவர்கள் சட்டமன்றத்தில் அமர்ந்துள்ளனர். கடன் வாங்கி ஆட்சி செயய்வது தான் நல்ல ஆட்சியா? கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும். மதுவில் வரும் வருமானத்தில் தான் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து வருகிறது.பிளாஸ்டிக்கையே ஒழிக்க முடியாத இவர்கள் எப்படி கள்ளசாரயத்தை ஒழிப்பார்கள்?
விவாசியிகளின் தற்கொலைக்கு நிவாரணம் தராத இவர்கள் கள்ளக்குறிச்சி விவாகரத்துக்கு ஏன் நிவாரணம் தருகிறார்கள். தேர்தல் வருவதால் தான் அரசியல் கட்சியினர் போட்டி போட்டு பணம் கொடுக்கின்றனர்.திரும்பிய பக்கமெல்லாம் டாஸ்மாக் உள்ளது அது ஒரு ஸ்லோ பாய்சன் என கூறியுள்ளார்.