நான் அம்மா ஆயிட்டேன்... ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் - குவியும் வாழ்த்துக்கள்

Alia Bhatt
1 மாதம் முன்

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட். இவர்கள் இருவரும் நீண்ட காலமாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.

 ரன்பீர் கபூர்  - ஆலியாபட் திருமணம்

சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்களது குடியிருப்பில் வண்ண விளக்குகளால் அலங்கரித்து, பாலிவுட் பிரபலங்கள் சிலரை அழைத்து எளிமையான முறையில் இவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தனர். ஆனால், திருமணம் முடிந்த 5வது நாளே படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றார் ஆலியா பட்.

குட் நியூஸ் சொன்ன ஆலியா பட் 

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ஆலியா பட் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், மருத்துவமனையில் செக் அப்புக்கு சென்றபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆலியா பட் “எங்களுக்கு குழந்தை வரப்போகிறது” என குறிப்பிட்டு, இரண்டு சிங்கங்கள் அதன் குட்டியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.

குவியும் வாழ்த்துக்கள்

இதைப் பார்த்த அவரது ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் ரன்பீர் கபூர் - ஆலியா பட்டுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது, டுவிட்டரில் AliaBhatt என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவரும் தற்போது ‘பிரம்மாஸ்திரா’ எனும் பேண்டஸி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.